பாரதப் பிரதமர் மோடி உடன் செல்பி எடுத்து கொண்ட முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டிம் புர்செட்டின் ட்விட்டர் பதிவினை தி.மு.க. கிண்டல் செய்து இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் பாரதப் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று இருக்கிறார். அந்த வகையில், அமெரிக்க தொழிலபதிபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அற்புதமான உரையை நிகழ்த்தி இருந்தார். இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தவகையில், கன்சர்வேடிவ் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டிம் புர்செட் பிரதமர் மோடி உடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதையடுத்து, அந்த செல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் டிம் புர்செட் பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் :
அதாவது, நான் கூச்சப்படாமல் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டேன் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவினை சுட்டிக்காட்டி தி.மு.க. நிர்வாகி மதுரை பாலா என்பவன் கிண்டல் செய்து இருக்கிறான். டிம் புர்செட் தெரிவித்த கருத்தின் உண்மையான அர்த்தம் கூட தெரியாமல் டெவலப்மெண்ட் கட்சியின் நிர்வாகி தனது ஆங்கில அறிவை வெளிப்படுத்தி இருக்கிறார்.