“தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களை பொது இடங்களில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா, தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில் நடந்த ‘மாமன்னன்’ இசை வெளியிட்டு விழாவில் ‘தேவர் மகன்’ குறித்த மாரிசெல்வராஜின் பேச்சுக்குப் பிறகு இணையத்தில் சாதிய பாடல்கள் குறித்து விவாதம் எழுந்தது. இந்த விவாதங்களின் ஒருபகுதியாக சீனுராமசாமியின் இந்த கோரிக்கை கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.