உத்தரப் பிரதேச மாநிலத்தில் அல்லாஹூ அக்பர் என்று கூறியபடியே, தாய், அக்காவை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி ஆரிப், தந்தை மற்றும் அண்ணன் மீதும் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் கரேலியின் கவுஸ்நகர் பகுதியான பாரா மார்க்கெட் ஏரியாவில் வசித்து வருபவர் முகமது காதர். ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் இவரது மனைவி அனீஷா பேகம். இத்தம்பதிக்கு முகமது ஆசம், முகமது ஆரிப் என 2 மகன்களும், அப்ஃரீன் என்கிற நஹித் என்ற மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், நஹித் விவகரத்து பெற்று தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். அதேபோல, முகமது ஆசிம் மற்றும் முகமது ஆரிப் ஆகியோரும் அதே வீட்டில்தான் வசித்து வருகின்றனர்.
இந்த சூழலில், சொத்து தொடர்பாக முகமது ஆரிப்புக்கும், அவரது பெற்றோர் மற்றும் சகோதரருக்கும் பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆரிப் தனது மனைவியுடன் சேர்ந்து தனது வயதான தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 முறை புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆரிப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே ஆரிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருடனும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், தனது மனைவி மற்றும் குழந்தையை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்த ஆரிப், வீட்டின் கதவை உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டு, தாயையும், சகோதரியையும் அல்லாஹூ அக்பர் என்று கூறியபடியே கோடரியால் வெட்டி இருக்கிறார். பின்னர், தனது தந்தையையும் வெட்டி இருக்கிறார். பிறகு, அண்ணனின் மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார். அலறல் சத்தம் அவரது அண்ணன் ஆசிம் ஓடவரவே, அவரையும் வெட்டி இருக்கிறார். உடனே, தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட்டிக் கொண்டு அருகிலிருந்த ஒரு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆரிப், வீட்டிலிருந்து சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு வீட்டிற்கு தீவைத்திருக்கிறார். உடனே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால், வீட்டில் தயாராக வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, அவர்கள் மீது சரமாரியாக வீசி இருக்கிறான். இதனிடையே போலீஸாரும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மீதும் ஆசிட் பாட்டிலை வீசி இருக்கிறான்.
இதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், ஆரிப் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பிறகு, போலீஸார் வீட்டிற்குள் புகுந்து படுகாயமடைந்த முகமது காதர் மற்றும் ஆசிம் அவரது மனைவி, குழந்தைகளை மீட்டிருக்கிறார்கள். பின்னர், ஆரிப்பை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதனிடையே. ஆரிப் கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். கருப்புக் கொடியுடன் பால்கனியில் நடப்பதை காட்டும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.