சக்தி திட்டத்தை எதிர்த்து தனியார் போக்குவரத்து துறை பெங்களூரில் பந்த்

சக்தி திட்டத்தை எதிர்த்து தனியார் போக்குவரத்து துறை பெங்களூரில் பந்த்

Share it if you like it

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற தேர்தல் வாக்குறுதியை கொடுத்து அதன் மூலம் கனிசமான பெண்களின் வாக்கை பெற்று ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது தற்போது அந்த இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பின் காரணமாக அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது ஆனால் தனியார் பேருந்துகள் ஷேர் ஆட்டோ வேன் உள்ளிட்டவற்றில் வருமானம் இழந்து அவர்களின் வாழ்வாதாரம் முடங்கி இருக்கிறது இதனால் பாதிக்கப்பட்ட தனியார் போக்குவரத்து துறை கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் 11 923 அன்று 24 மணி நேரம் மாநில அரசின் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்றும் சக்தி திட்டத்தை எதிர்த்து பந்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது இதில் கர்நாடகத்தில் இயங்கும் தனியார் பேருந்து கார் பேன் ஷேர் ஆட்டோக்கள் தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து துறையும் பங்கேற்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் வழங்குவோம் என்று அறிவிப்பு கொடுத்தார்கள். அதன் மூலம் கனிசமான பெண்களின் வாக்கு கிடைத்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார்கள். அதன் பிறகு மாநகர பேருந்துகளில் எல்லாவற்றிலும் இல்லை வெள்ளை அட்டை கொண்ட பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம். டீலக்ஸ் என்னும் சொகுசு பேருந்துகளில் வழக்கம் போல் கட்டண பயணமே தொடரும் என்று தங்கள் கைவரிசையை காட்டினார்கள்.

தமிழகத்துப் பெண்கள் கிடைத்தவரை லாபம் என்ற வகையில் இந்த இலவச பேருந்து பயணத்தை இன்று வரை அனுபவித்து வருகிறார்கள் . இதன் பலனாக பொது போக்குவரத்தில் உள்ளூர் அளவில் பெரும் பங்களிப்பு வழங்கிய ஷேர் ஆட்டோக்கள் மினி வேன் மற்றும் மினி பஸ்கள் என்று தனியார் கட்டண போக்குவரத்துகள் முழுவதுமாக தங்கள் வாழ்வாதாரம் இழந்து முடங்கியது. அதன் விளைவாக தங்களை தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலை நிறுத்திக் கொள்ள அவர்கள் இரு மடங்கு கட்டண உயர்வை செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்தது. இதன் மூலம் இலவச பேருந்துகளை தவிர்த்து ஷேர் ஆட்டோ மினி வேன் மினி பேருந்து இன்று கட்டண பேருந்தில் பயணித்தவர்கள் பெரும் கட்டண சுமையை ஏற்க வேண்டிய கட்டாயம் வந்தது.

மறுபக்கம் ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் இயங்கும் அல்லது இயக்கப்படும் தமிழக அரசின் போக்குவரத்து துறை பணப்பலன்கள் பல ஆண்டுகளாக கிடைக்க பெறாமல் ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கும் போக்குவரத்து துறை ஊழியர்கள் லஞ்சம் ஊழல் என்று பல ஆண்டுகளாக போதுமான பராமரிப்பு உபகரணங்கள் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு இல்லாமல் போதிய அளவில் பணியாளர் இல்லாமல் என்று பெரும் நெருக்கடியில் இருந்து வந்த அரசு போக்குவரத்து துறை இந்த மகளிர் இலவச பேருந்து பயணம் என்ற காரணமாக இன்னும் நொடிப்பு நிலையில் விளிம்பில் நின்றது.

ஆனாலும் மாநில அரசோ போக்குவரத்து துறையோ இந்த பொருளாதார சீரழிவு பற்றியோ ஒரு தவறான முன்மாதிரியாக தமிழக அரசியலில் தாங்கள் கட்டமைத்த இந்த திட்டத்தை பற்றியும் எள்ளளவும் கவலை இன்றி ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டே சாட்சி என்று பெருமை பேசி வருகிறார்கள். இந்த இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் ஒருபுறம் ஆண்கள் ஏச்சுப் பேச்சுக்கள் நடத்துனர் ஓட்டுனர் உள்ளிட்டவர்களின் அலட்சியம் வெள்ளை அட்டை பேருந்துகளில் இலவச பயணம் என்பதை கடந்து வெள்ளை அட்டை பேருந்துகள் என்றாலே அது மகளிர் பேருந்துகள் என்ற நிலையில் பெரும்பாலான பெண்கள் செய்யும் அராஜகம் என்று கிட்டத்தட்ட ஆண்களோ பள்ளி மாணவர்களோ அல்லது ஆயிரம் ரூபாய்க்கு விருப்பம் போல் பயணிக்கும் பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களோ வெள்ளை அட்டை பேருந்துகளில் பயணிக்கவே அஞ்சும் சூழ்நிலையே சென்னை மாநகர போக்குவரத்து அளவில் எதார்த்த நிலை. ஆனால் இவ்வளவு இடர்பாடுகள் வந்த போது கூட இந்தத் திட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று அதனால் பயன் பெறும் பயனாளர்களும் முடிவெடுக்கவில்லை. பெரும் நஷ்டம் பண சுமையை எதிர்கொள்ளும் போக்குவரத்து துறையின் நலன் கருதி இந்த திட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் எண்ணம் தமிழக அரசுக்கும் இல்லை. இந்த இரண்டிற்கும் இடையில் தமிழக அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்களும் தன்மானத்தோடு கட்டணத்தோடு பயணிக்க தயாராக இருக்கும் தமிழகத்தின் பெண்களும் படும் பாடு சொல்லி மாளாது.

தமிழகத்தின் நிலைமை இப்படி இருக்க திமுகவின் அதே தேர்தல் பாணியை பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலம் முழுவதும் பெண்களுக்கு நகரப் பேருந்துகள் உள்ளூர் பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை கொடுத்து தமிழகத்தின் அதே பாணியில் மகளிர் வாக்கை கவர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டார்கள். வந்த நாள் முதல் கர்நாடகத்தில் பெண் பேருந்துகளில் இலவச பயணம் வேண்டி பெண்கள் பெரும் அச்சுறுத்தலில் ஈடுபட்டு ஆங்காங்கே நடத்துனர் ஓட்டுனர் மீது தாக்குதலும் அரங்கேறியது.

திமுகவின் அதே பாணியில் கர்நாடக மாநில காங்கிரஸும் வெற்றி பெற்ற வந்தவுடன் இலவச பேருந்து பயணம் கர்நாடக மாநிலத்திற்கு பூர்வீகமாகக் கொண்ட பெண்களுக்கு மட்டுமே. வேறு மாநிலங்களில் இருந்து கல்வி வேலை வாய்ப்பிற்காக குடியேறிய பெண்களுக்கு கிடையாது என்றும் ஒரு நிபந்தனையை முன்வைத்தது. அதற்குரிய ஆய்வுகள் நிபந்தனைகள் என்று காலத்தை தாழ்த்த திட்டமிட்டது. ஆனால் சுதாரித்துக் கொண்ட கர்நாடக மாநில பெண்கள் பெரும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு இன்னமும் மாநில அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் அச்சத்தோடு போக்குவரத்து வாகனங்களை இயக்கும் நிலைமைதான் அங்கு நீடிக்கிறது.

இந்த பந்திற்கு பொதுமக்கள் தொழிலதிபர்கள் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவர்களின் ஆதரவு எதிர்ப்பு எந்த நிலையில் இருக்கும் இந்த பந்த் எந்த அளவிற்கு வெற்றிகரமாக நடந்தேறும் என்பது கணிக்க முடியாத விஷயம் .ஆனால் இந்த அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற காரணம் ஒரு தவறான முன் மாதிரி. இலவசம் வாக்களிக்க பணம் என்ற அரசியல் சீர்கேட்டிற்கு இது வழி வகுக்கும் என்ற பல தரப்பட்ட மக்களின் கருத்துக்கள் பந்த்தாக எதிரொலிக்கிறது. அதற்கு பல தரப்பினரின் முழு ஆதரவும் இருக்கிறது என்பதே யதார்த்த உண்மை.

அந்த வகையில் தமிழக மக்களைப் போல இலவசம் என்ற அறிவிப்பு வந்தாலே போதும் .அது எதனால் வருகிறது? எங்கிருந்து வருகிறது அதனுடைய பின்விளைவு எப்படியாக இருக்கும் அதன் பாதிப்புகள் எல்லா துறைகளிலும் எப்படி எதிரொலிக்கும் என்ற எந்த முன்யோசனையும் இல்லாமல் தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் கிடைத்த வரை லாபம் என்று அரசாங்கத்திடம் அனைத்தையும் இலவசமாக எதிர்பார்க்கும் மலிவான மனநிலை கர்நாடக மக்களிடம் இல்லை. என்பது இந்த பந்தின் மூலம் தெளிவாகிறது. அந்த வகையில் பெங்களூருவில் இன்று நடைபெறும் பந்த் தனியார் துறையின் வாழ்வாதாரம் வருமானத்தை பாதுகாக்க வேண்டும் என்பதோடு அரசியல் கட்சிகள் இந்த இலவச வாக்குறுதிகளின் மூலம் தவறான முன்னுதாரணத்தையும் அரசியல் சீரழிவையும் தேர்தலை பணம் கொழிக்கும் திருவிழாவாகவும் மாற்ற முயலும் நாலாந்தர அரசியலுக்கு ஒரு முடிவு கட்டவும் வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற சலுகையின் மூலம் ஏற்பட்ட சீரழிவை பார்த்து விழித்து கொண்ட கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து துறை முளையிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள களமிறங்கி இருக்கிறது. அவர்களிடையே இருக்கும் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அவர்களது கோரிக்கைக்கு நிச்சயம் ஒரு பலனை பெற்றுத் தரும். ஆனால் இதே இலவச பேருந்து பயணம் என்ற காரணத்தால் மொத்தமாக சீரழிந்து நிற்கும் மாநகரப் போக்குவரத்து துறை தமிழக அரசு போக்குவரத்து துறை வெள்ளை பேருந்துகளில் பெண்கள் எதிர் கொள்ளும் தன்மான அச்சுறுத்தல் என்று அனைத்தையும் புறம் தள்ளி இலவசம் கிடைத்தால் போதும் தனக்கு கிடைத்த வரை லாபம் என்ற மலிவான மனநிலையில் தமிழகம் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்து வருகிறது.


Share it if you like it