2022 டிசம்பர் 31 ஆம் தேதி திமுகவின் பொதுக்கூட்டம் ஒன்று விருகம்பாக்கத்தில் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் என்ற இரு நபர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்த பெண் காவலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த காவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்பின் எதிர்க்கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் கண்டனங்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆதரவிற்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவ்விருவர் கட்சியிலிருந்தும் நீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று ஒரு கும்பலானது காவல்நிலையித்தில் நுழைந்து அந்த பெண் காவலரை மரியாதையாக வழக்கை வாபஸ் வாங்கிவிடும்படி மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர ராஜா காவல் நிலையத்திற்கு போன் செய்து இன்ஸ்பெக்டரிடம் அந்த பெண் காவலரை வாபஸ் வாங்கும்படி கேட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர பெண்களுக்கு இதுபோல் கொடுமை நடந்தால் அவர்கள் என்ன செய்வார்கள். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.