Share it if you like it
.கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை, 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்தது.
இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கடந்த ஆண்டை விட 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்தது.
இதில் பதக்கம் வென்ற இந்திய ஆயுதப் படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது பேசிய அவர், ”ஆசிய விளையாட்டில் சாம்பியனான வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.15 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்” என்றார்.
இதற்குமுன் பிரதமர் மோடி பதக்கங்களை வென்ற வீரர்களுடன் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it