தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதனால் திமுக அரசை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார். இந்நிலையில், திமுகவின் சாதனைகள், 52,000 கோடி டாஸ்மாக் வருமானம், கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியானது, மாநிலத்தின் கடன்சுமையை 7,20,000 கோடியாக அதிகரித்தது, மணல் கொள்ளையால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாக்கி இருப்பது, கோவில் உண்டியலை கொள்ளை அடிப்பது, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், யாருக்குக் கொடுத்தார்கள் என்பதே தெரியாமல் தேடும் திட்டத்தை நிறைவேற்றியது, திரைப்படங்களை முடக்குவது, அரசு மருத்துவமனைகளை அபாய மருத்துவமனைகளாக மாற்றி வைத்தது, போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரும் ஆசிரியர்கள், செவிலியர்கள் அனைவரையும் கைது செய்வது, முதலமைச்சரின் மகனும் மருமகனும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தது. ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் அமைச்சர்களைக் காப்பாற்றுவது, சட்டமன்றத்தில் உதயநிதி புகழ் பாடுவது, 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களைச் சரி செய்யாதது. இவைதான் திமுகவின் சாதனைகள்.
மேலும் ஓசூரில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்த வைத்த பள்ளிக்கூட மேற்கூரை சிறிய மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் அங்கு இல்லை. திமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய கட்டிடத்தின் நிலை இது தான். எங்கும் ஊழல் எதிலும் ஊழல். வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியை, மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.