கண்ணுக்கு மை தீட்டிய பெண்ணை முத்தலாக் செய்த சலீமை தட்டி தூக்கிய காவல்துறை !

கண்ணுக்கு மை தீட்டிய பெண்ணை முத்தலாக் செய்த சலீமை தட்டி தூக்கிய காவல்துறை !

Share it if you like it

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேசதத்தின் கான்பூரில் உள்ள குலி பஜார் பகுதியில் வசிக்கும் லாலி குல்சபா என்ற பெண், பிரயாக்ராஜில் வசிக்கும் சலீம் என்பவரை 17 ஜனவரி 2022 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் குடும்பம் பிரயாக்ராஜின் புல்பூரில் வசித்து வருகின்றனர். சலீம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் குல்சபா அழகு நிலையத்திற்கு சென்று தன் புருவத்திற்கு மை தீட்டி திருத்தியுள்ளார். இதனை தன் கணவருக்கு அலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குல்சபா கணவரான சலீம் அலைபேசியிலேயே முத்தலாக் சொல்லி அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்த அப்பெண் தனது கணவருக்கு பலமுறை அலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதுதொடர்பாக, தன் கணவர் சற்று வயதானவர். நான் மேக்கப் செய்வதும், அழகு நிலையம் செல்வதும் என் கணவருக்கு பிடிக்காது. கொஞ்ச நேரம் மட்டும் கோபப்படுவார் என்று நினைத்தேன். பிறகு இதுபற்றி அப்பெண் அவருடைய மாமியாரிடம் பேசியபோது, எங்கள் மகன் என்ன செய்தாலும் சரிதான் என்று அவரும் தன் மகனுக்குத்தான் ஆதரவளித்து அப்பெண்ணை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சலீம் , அவரது தாயார் உட்பட 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாசாய் நாகாவின் ஏசிபி நிஷாங்க் சர்மா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.


Share it if you like it