Share it if you like it
கோவை பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் உடல்நிலை குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவரின் உடல்நிலை குறித்து அலைபேசியில் நலம் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில், கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it