தீபாவளி திருநாளை முன்னிட்டு விஜயபாரதம் வார இதழ் அமைப்பானது தீபாவளி மலரை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று புரசைவாக்கம் பகுதில் அமைந்துள்ள சேவா கட்டிடத்தில் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியானது விஜயபாரதம் வார இதழ் நிர்வாக அறங்காவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. தீபாவளி மலரை வெளியிடும் சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி. சே.கீதாலட்சுமி மற்றும் ஊடகவியலாளர் திருமதி.கோதை ஜோதிலட்சுமி அவர்களும். இலக்கிய மேகம் திரு.ஸ்ரீனிவாசன் அவர்களும் கலந்துகொண்டனர். அதில் பேசிய சே.கீதாலட்சுமி, தீபாவளி மலர் புத்தகம் மலரை போன்றது. இந்த புத்தகத்தில் சாலை முதல் அனைத்து துறைகளை பற்றியும் மிக அழகாக கூறியுள்ளனர். அறம் சார்ந்த நன்னூல்களை குழந்தைகளுக்கு நாம் தான் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் பேசிய ஊடகவியலாளர் திருமதி.கோதை ஜோதிலட்சுமி அவர்கள், சிறுவயது முதலே நல்ல விஷயங்களை போதிக்கத்தான் புதிய கல்வி கொள்கை வரப்போகிறது. அனைத்து துறையிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். பெண்களை முன்னேற்ற வேண்டும் என்பதை விட பெண்களின் தலைமையில் முனீரா வேண்டும் என்பது தான் என் எண்ணம் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.
விஜயபாரதம் வார இதழின் தீபாவளி மலரை வெளியிட்ட எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சே.கீதாலட்சுமி !
Share it if you like it
Share it if you like it