தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் மனு தாக்கல் செய்தார்
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நவ.10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அமைச்சர்களான உதயநிதி,சேகர்பாபு ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துக்களை கூறியுள்ளனர்.அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடமையில் இருந்து தவறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார்.