காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிட்டு, நியாயமான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிட்டு, நியாயமான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Share it if you like it

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. .இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் மனு தாக்கல் செய்தார் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நவ.10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அமைச்சர்களான உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துக்களை கூறியுள்ளனர்.அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடமையில் இருந்து தவறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மற்றும் தமிழக மக்கள் சார்பில், அதிகாரம், பணபலம் மற்றும் பதவியில் இருக்கும் திமுக அரசின் பலத்துக்குச் சட்டம் வளைந்து கொடுக்கக் கூடாது என்ற சாமானிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திய மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பதவிப் பிரமாணத்தை மீறியதற்காக தமிழக அரசு அமைச்சர்கள் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரு சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறைக்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயலாகும் என்றும், அதிகாரத்தில் உள்ள ஒருவர் அடாவடித்தனமான பேச்சின் ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

தி.மு.க.வின் பழமையான பிரிவினைவாத அரசியலைக் கடைப்பிடிக்காமல், மது, ஊழல் மற்றும் பிற சமூகத் தீமைகளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் மனநிலையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பிரதிபலித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிட்டு, இழந்த நற்பெயரை மீண்டும் நிலைநிறுத்த நியாயமான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது. இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it