பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சட்டசபையில் நாகூசும் வகையில் பெண்களை பற்றி மிக கேவலமாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். அதில், பெண்கள் படித்திருந்து திருமணம் செய்தால் அவர்களுக்கு எப்படி உடலுறவு வைக்க வேண்டும் என்று தெரியும். இவ்வாறு சட்டசபையில் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் இருந்தவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அவர்களும் உடன் சேர்ந்து சிரித்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துகொண்டு ஒட்டுமொத்த பெண்களுக்கெதிராக இவ்வாறு பேசியது மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களின் சந்திப்பில், “சட்டசபையில் நான் ஒரு விஷயத்தை சொன்னேன், அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. நான் கூறியது தவறாக இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் என் வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். யாராவது என்னை விமர்சித்தால், நான் என் வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். யாராவது தொடர்ந்து விமர்சித்தால், நான் அவர்களுக்கு உதவுகிறேன். இவ்வாறு பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.