பேரையூர் தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் டி.கல்லுப்பட்டி வேளாண் அலுவலகத்தில் மானியத்தில் குதிரைவாலி விதை பெற்றுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைத்தனர். விதைத்த 2 மாதங்களுக்கு பின்புதான் தெரிந்தது முளைத்தது குதிரைவாலி அல்ல. மாட்டுத்தீவனமான புல் என்று இதுகுறித்து விவசாயிகள் வேளாண் அலுவலகத்தில் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுதொடர்பாக செம்பட்டி விவசாயி கண்ணன் அவர்கள், டி. கல்லுப்பட்டி வேளாண் அலுவலகத்தில் பெற்ற குதிரைவாலி விதையை 12 ஏக்கரில் பயிரிட்டேன். குதிரை வாலி விதைகளுக்கு பதிலாக மாட்டுத்தீவன புல்லுக்கான விதைகளை தந்து விட்டனர். விதைத்த சில நாட்களுக்குப் பின்பே இது குதிரைவாலி அல்ல எனத் தெரிந்தது. வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்டேன் அவர்கள் பார்வையிட்டு நஷ்ட ஈடு தருவதாக கூறினர். இரண்டு மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. தற்போது மாற்று விதை தருகிறோம் என்று கூறுகின்றனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவழித்துள்ளேன். இவர்கள் வழங்கிய விதையால் ரூ. 4 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.