திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியாக முப்போகம் விளையும் நிலமான 3200 ஏக்கர் பூமியை தரிசு நிலம் என தவறாக வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்துவதாகவும் இதற்கு 9 கிராமங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட விவசாயிகள் அதிகாரிகள் அமைச்சர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முடிவாக அறத்தின் வழியில் கடந்த 125 நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இந்த விவசாயிகளின் போராட்டத்தை சிறிதும் கவனம் கொள்ளாமல் மெத்தனமாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அன்று சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையிட வந்த விவசாயிகளை கைது செய்த அதிமுக அரசை கண்டித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைந்தால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்வைத்து போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.
இதுதொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவரின் மனைவி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், விவசாயிகள் விவசாயிகளின் சொத்திற்காக தான் போராடுகிறோம். நாங்கள் அரசு நிலங்களை கையகப்படுத்தவில்லை. நாங்கள் மொத்த விவசாய மக்களும் இறந்து விடுகிறோம். எங்களை குழி தோண்டி புதைத்துவிட்டு அதன்மேல் SIPCOT கட்டி கொள்ளுங்கள் என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.