15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! அரண்டு போன காவல்துறை ! உச்சகட்ட பரபரப்பு !

15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! அரண்டு போன காவல்துறை ! உச்சகட்ட பரபரப்பு !

Share it if you like it

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு மர்ம மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து பசவேஷ்வர் நகர் நாஃப்லே பள்ளி உட்பட பல பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள நீவ் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காலை 6 மணியளவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் வீட்டுக்கு எதிரே இந்தப் பள்ளி அமைந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சதாசிவநகர் கிளைக்கு மட்டுமல்லாமல் அப்பள்ளியின் ஐந்து கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீவ் பள்ளியின் சதாசிவநகர், ஒயிட்ஃபீல்ட் மற்றும் கோரமங்கலா உள்ளிட்ட அப்பள்ளியின் கிளைகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சில பள்ளி நிர்வாகங்கள் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக பெற்றோர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ்-ம் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சேர்ந்து போலீசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார். வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து பள்ளிகளுக்கு முன்பு பெற்றோர்கள் அதிக அளவில் கூடியதால் பெங்களூர் நகரத்தில் இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. பெங்களூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் வருவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு கூட ஒரே நேரத்தில் 30 பள்ளிகளுக்கு இதுபோன்ற மிரட்டல் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it