பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் மொத்த பள்ளக்கரணையும் கடுமையாக சூழ்ந்தது.ஆறு நாட்கள் கடந்தும் மக்கள் இன்னும் பள்ளிக்கரணையில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பள்ளிக்கரணை வெள்ளம் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் என் பேரக்குழந்தைக்கு 36 மணி நேரம் பால் கிடைக்கவில்லை என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,சென்னை பள்ளிக்கரணையில் மிக்ஜாம் புயலால் வெள்ளம் சூழ்ந்ததால் என் பேரக்குழந்தைக்கு 36 மணி நேரம் பால் கிடைக்கவில்லை. என் மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் 36 மணி நேரத்திற்கு படகு மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் இறுதியாக ஆட்டோ ரிக்ஸா மூலம் அங்கிருந்து வெளியே வந்தார். என் மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததால் என்னால் உடனே தொடர்பு கொள்ளவும் முடியவில்லை..
சட்டசபையில் சபாநாயகராக இருந்தபோதிலும் என்னால் என் மகளை உடனடியாக மீட்கவும் முடியவில்லை.. சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப சில சென்னை தற்போதைய நிலையில் சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். இதற்கு காரணம் சென்னையில் 3 மாதங்கள் பெய்ய வேண்டிய மழை 36 மணிநேரத்தில் பெய்துள்ளது. இதுவே காரணம். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அப்பாவு கூறினார்.