நா ரெடி தான் வரவா ! சர்வதேச தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் !

நா ரெடி தான் வரவா ! சர்வதேச தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் !

Share it if you like it

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அடுத்து யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும், மிசோரம் மாநிலத்தில் பிராந்திய கட்சியும் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்ற தெலங்கானா மாநிலத்திலும் பாஜக முந்தைய தேர்தலில் பெற்ற இடங்களைக் காட்டிலும் சற்று அதிகமாக பெற்றுள்ளது.இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் அவை யாவும் அனைத்து மாநிலங்களிலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. இதனால் தற்போது வரை பாஜகவின் கரமே உயர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

இந்த சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற ஆய்வு நிறுவனம் ‘சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு’ என்ற கருத்து கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 76% ஒப்புதல் விகிதத்துடன் சர்வதேச தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 76% மக்கள் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 18% மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், 6% பேர் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவெல் 66% ஒப்புதல் விகிதத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் 58% ஒப்புதல் விகிதத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.


Share it if you like it