நிவாரணத் தொகை கூட வேண்டாம், வெள்ள நீரை அகற்றினாலே போதும் – மக்கள் வேதனை !

நிவாரணத் தொகை கூட வேண்டாம், வெள்ள நீரை அகற்றினாலே போதும் – மக்கள் வேதனை !

Share it if you like it

திருநின்றவூர் நகராட்சி ராமதாஸபுரம், பெரியார் நகர், முத்தமிழ் நகர், பாரதியார் தெரு, கம்பர் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 10 நாட்களாகியும் வெள்ள நீரை வடிய வைக்காதது குறித்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரை அகற்ற, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், 3 துணை இயக்குநர்கள் மற்றும் திருவள்ளூர், பொன்னேரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொறியாளர்களை ஈடுபடுத்தி வெள்ள நீரை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார். 10 நாட்களாகியும் வெள்ள நீர் அகற்றப்படவில்லை என குற்றம்சாட்டும் பொதுமக்கள், “நிவாரணத் தொகை கூட வேண்டாம், வெள்ள நீரை அகற்றினாலே போதும்” என நம்மிடையே வேதனை தெரிவிக்கின்றனர்.


Share it if you like it