திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வெள்ளத்தின் பாதிப்புகளை மக்கள் சமூக வலைதளத்தில் பாதிப்புகளாக வெளியிட்டுள்ளனர். அதீத கனமழையால், குறிப்பாக நெல்லை மாநகரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பாஜக உறுப்பினர் ஒருவர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களுக்கு காலையும் மாலையும் இலவசமாக பால் விநியோகம் செய்து தேச சேவை புரிகிறார். இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக சென்னையில் மிக்ஜாம் புயலின்போது பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருந்தபோது அநியாயமாக பால் 200 தண்ணீர் 250 ருபாய் படகிற்கு 2500 என மனசாட்சி இல்லாமல் கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு மத்தியில் பாஜக உறுப்பினரின் இந்த நிகழ்வானது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
https://x.com/BJP4TamilNadu/status/1736637343673843902?s=20