மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் திருவொற்றியூர் மேற்கு பகுதியான 4, 6,7 வார்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் சிபிசிஎல் நிருவனத்தில் இருந்து எண்ணை வெளியேறியது. திருவொற்றியூர் ராஜாஜி நகர் முதல் முகத்துவாரம் வரை ஆயிலானது தண்ணீரில் படர்ந்து வந்தது.
மணலி எக்ஸ்பிரஸ் சாலையின் இருபுறமும் இருந்த நகர்களில் வீடுகளிலும் ஆயில் புகுந்தது. இதனால் 4வது வார்டு ஆதிதிராவிடர் காலணி, திருவீதியம்மன் நகர், நியூகாலணி, கிரிஜாநகர், பிருந்தாவன் நகர், முருகப்பாநகர், ஜோதிநகர், டி. எஸ் கோபால் நகர், விபிநகர் பகுதிகளில் ஆயில் வீடுகளுக்குள் புகுந்தது. இன்று வரை அவர்கள் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆயில் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப் பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஜோதிநகர், முருகப்பா நகர், கிரிஜாநகர். கோபால் நகர் விடுபட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் அங்கு ஆயில் போகவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இதனால் கோபப்பட்ட ஜோதிநகர் மக்கள் மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டடனர். தகவல் அறிந்து வந்த சாத்தங்காடு காவல் நிலைய ஆய்வாளர் கேட்டுக் கொண்டதின் பேரில் போக்கு வரத்திற்கு இடையூறு இன்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.