காலை உணவு வழங்காததால், பசியோடு பட்டினியால் வாடிய குழந்தைகள் !

காலை உணவு வழங்காததால், பசியோடு பட்டினியால் வாடிய குழந்தைகள் !

Share it if you like it

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதையும், அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்படையாமல் இருப்பதையும், பள்ளிகளில் அவர்களின் வருகையை கணிசமாக அளவு அதிகரிக்க வைப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கில் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக, முதல் கட்டமாக 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகே உள்ள மாமாகுடி ஊராட்சியை சேர்ந்த அப்பராசப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களின் நலன்கருதி வழங்கப்படும் காலை உணவு, திடீரென வழங்காமல் இருந்துள்ளனர். இதனை அறியாத அப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சின்ன சிறு குழந்தைகள் காலை உணவை பள்ளியில் உண்ணலாம் என பசியோடு வந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது குறித்து ஒருவர் செல்போனில் இதனை பதிவு செய்து. பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்காமல் இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி பரவி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், கண்டனங்களும் எழுந்து வருகிறது.


Share it if you like it