நாடு முழுவதும் 15,803 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அண்மையில் முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை பகிர்ந்துகொண்ட புள்ளிவிவரம் வருமாறு: திருநங்கை அடையாள அட்டை கேட்டு திருநங்கைக்கான தேசிய இணைய தளத்தில் மொத்தம் 24,115 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 15,803 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 4,307 விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டன.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,478, ஒடிசாவில் 2,237 ஆந்திராவில் 2,124 பேருக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள் மற்றும் மிசோரத்தை சேர்ந்த எவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, கோவா ஆகிய மாநிலங்களில் முறையே 2, 7, 11 என்ற என்ற எண்ணிக்கையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 3,225 விண்ணப்பங்கள் 30 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. நிலுவையை குறைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,87,803 பேர் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.