அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் முழுவீச்சாக கட்டப்பட்டு வருகிறது. கோவில் திறப்புவிழா வருகிற 22 ஆம் நாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவில் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களின் நீண்ட நாள் ஆசை மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த சுபநிகழ்ச்சியில் திரளாக பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்பினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் ராமர் கோவிலுக்காக நன்கொடை வசூலிக்க ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா இதுவரை யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. எனவே யாராவது நிதி கேட்டு வந்தால் பொதுமக்கள் யாரும் நம்பி பணம் கொடுக்காதீர்கள் என விஎச்பி செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் குறிப்பிட்டுள்ளார்.