பொங்கல் பண்டிகையின்போது மக்களுக்கு இடையூறு செய்வது ஏன் ? – உயர்நீதிமன்றம் கேள்வி ?

பொங்கல் பண்டிகையின்போது மக்களுக்கு இடையூறு செய்வது ஏன் ? – உயர்நீதிமன்றம் கேள்வி ?

Share it if you like it

அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்றும் பேச்சுவார்ததை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே இன்று ( 9-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. அதேபோல் நேற்று காலை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி முறையீடு செய்தார்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையின்போது மக்களுக்கு இடையூறு செய்வது ஏன் ? இந்த விவகாரத்தில் தமிழக அரசும் போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள் ? போராட்டம் நடத்த அனைவர்க்கும் உரிமை உள்ளது. ஆனால் பண்டிகை நேரத்தில் இதுபோல் போராட்டம் நடத்துவது முறையற்றது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ‘நகரத்தில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமங்களில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரிக்கான அகவிலைப்படியை வழங்க முடியுமா?’ எனக் கேட்டு பிற்பகலுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.


Share it if you like it