பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்விற்காக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர்.
கடந்த மாதம், காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்ரீ மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியாகாந்தி ஜனவரி 22, அன்று நடைபெறவுள்ள அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சோனியா காந்தி மற்றும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு காங்கிரஸ் தரப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நிராகரித்து உள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டுள்ளனர் காங்கிரஸ் கட்சினர். இதனால் நாடு முழுவதும் கொண்டாடி மகிழும் அயோத்தி கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் கட்சினர் நிராகரிப்பதால், ஒட்டுமொத்த ஹிந்துக்களையே காங்கிரஸ் கட்சினர் நிராகரிக்கிறார்கள் எனபதை தான் காட்டுகிறது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.