அரசுப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தில் இனி சமூகநீதி பாடல் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசுப் பள்ளிகளில்படித்த முன் னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் ‘விழுதுகள்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் உருவாக்கப்பட்ட ‘சமூகநீதி’ உட்பட 10 கருத்துக்கள் சார்ந்த பாடல்கள் அடங்கிய குறுந்த கட்டை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட் டார். அதைத்தொடர்ந்து இந்த தொகுப்பில் உள்ள சமூகநீதி பாடலை பள்ளி காலை வணக்கக் கூட்டத்தில் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளிகளின் காலை வணக்கக் கூட்டத்தில் ‘சமூகநீதி’ பாடல் பாடப்படும். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தில் இனி சமூகநீதி பாடல் !
Share it if you like it
Share it if you like it