ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, சீதாதேவிக்காக வாழை நாரில் புடவையை அனுப்பிய தமிழகம் !

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, சீதாதேவிக்காக வாழை நாரில் புடவையை அனுப்பிய தமிழகம் !

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்திலிருந்து அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமம் சார்பில், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 20 அடி நீளத்தில் வாழை நார் புடவை பிரத்தியேகமாக சீதாதேவிக்காகச் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவு குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தினர், வாழை, கற்றாழை, அன்னாசி, மூங்கில் உள்ளிட்ட இயற்கை நார்களை இழைத்து, புடவை, கைப்பை, பேன்ட், சட்டை ஆகியவற்றைத் தயார் செய்கின்றனர்.

இந்த நிலையில்,இயற்கை நார் நெசவு குழுமம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, வாழை நாரில் புடவையை சீதாதேவிக்காகச் செய்து அனுப்பியுள்ளனர்.

அதன்படி பத்து நாட்களாக இரவு, பகலாக நெய்து, ராமர் கோவில் வடிவமைப்புடன் கூடிய புடவையைத் தயார் செய்துள்ளனர். மேலும் இந்த புடவை, 4 அடி அகலம், 20 அடி நீளம் உடையது.


Share it if you like it