ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. ஹேமந்த் சோரன் மீதான வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
நில அபகரிப்பு வழக்கில் வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரான சாம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார்.
6 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தம்மை கைது செய்யும் அமலாக்கத்துறை மெமோவில் கையெழுத்திட ஹேமந்த் சோரன் மறுத்ததாகவும் கூறப்பட்டது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் ஹேமந்த் சோரன் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில் புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சாம்பாய் சோரன், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரும் கடிதத்தை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அம்மாநில ஆளுநரிடம் கொடுத்தனர். இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.