உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்த பிரான் பிரதிஷ்டை விழா தொலைக்காட்சிகளில், திரையரங்குகளில், ரயில் நிலையங்களில், சமூக வலைத்தளங்களில் என உலகமக்கள் அனைவரும் காண வேண்டும் என்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிலையில் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவைப் பாராட்டி, கனடாவில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா, கனடா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவைப் நேரடி ஒளிபரப்பில் பார்த்ததாக கூறினார்.
மேலும் அவர் , “அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவானது கனடாவில் உள்ள ஒரு மில்லியன் இந்துக்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 1.2 பில்லியன் இந்துக்களின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.
மகத்தான தியாகங்கள், பல நூற்றாண்டுகாலம் எதிர்பார்ப்புக்கு பிறகு அயோத்தி பகவான் ஸ்ரீ ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள சுமார் 115 கோவில்களில் ஹிந்து மக்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வை நேரலையில் பார்த்ததை போலவே நானும், ஒட்டவாவில் உள்ள ஹிந்து கோவிலில் கண்டு ரசித்தேன்” எனக் கூறினார்.
இந்தியாவும் கனடாவும் இயற்கையான பங்காளிகள் என வர்ணித்த அவர் இந்தியா தனது நாகரிகத்தை ஒரு பெரிய உலகப் பொருளாதார சக்தியாக மாற்றுவதற்காக மீண்டும் கட்டமைத்து வருவதாகக் கூறினார்.
இதுகுறித்து அவர், ” இந்து தர்மத்தின் பிறப்பிடமான இந்தியா, அதாவது பாரதம், ஒரு பெரிய உலகளாவிய பொருளாதார, புவிசார் அரசியல் சக்தியாக உருவெடுக்க அதன் நாகரிகத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறது” என்று கூறினார்.
https://x.com/AryaCanada/status/1752414968991953081?s=20