சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
குற்ற வழக்கில் கடந்த 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்தஅடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். இந்நிலையில் 7 மாதமாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அரசு வேலையே செய்யாமல் மக்கள் வரிப்பணத்தில் மாதத்திற்கு 1.05 லட்சம் ரூபாய் என்று மொத்தம் 8.40 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.