டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் மீதான விலை உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிப்.1-ம் தேதி முதல் சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானம் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்படும் என்றும், உயர்ரக வகை மதுப்பானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.40, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80 மற்றும் அனைத்து பீர் வகைகளும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது.
இந்த புதிய விலையேற்றத்தால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும்போது, புலம்பிக் கொண்டே சென்றனர்.
கடந்த மாதம் அயோத்தியில் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இந்நிலையில் 5 கோடி பக்தர்கள்.. வெளிநாட்டு ஆய்வு நிறுவனமான ஜெஃப்ரிஸ் கூற்றின்படி, அயோத்தி நகரத்துக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை வாடிகன் சிட்டி, மெக்காவை விஞ்சும் அளவுக்கு இருக்கும். அதன்படி அயோத்தி ஆண்டுக்கு 5 கோடி பக்தர்களை ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. இது, உ.பி. மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும்.
ராமர் கோயில் மற்றும் சுற்றுலாவை மையமாகக் கொண்ட பிற முயற்சிகள் காரணமாக, உத்தரபிரதேசத்தில் 2024-25-ல் ரூ.5,000 கோடி வரை வரி வசூல் கிடைக்கும் என்றும், ஒட்டுமொத்த அளவில் இந்த ஆண்டு ரூ.4 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஒரு கோவிலை கட்டி பொருளாதார ரீதியாக மூன்றாவது இடத்தில் இருந்த உத்தர பிரதேசம் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனால் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாட்டில் எத்தனை அழகான பிரம்மாண்டமான கோவில்கள் உள்ளது. மதுரை மீனாட்சி,தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை சிவன் கோவில் எனசொல்லி கொண்டே போகலாம். இவ்வாறு நாம் பார்க்கும் திசைகள் எல்லாம் அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் வகையில் கோவிலை கட்டியுள்ளனர். அந்த கோவில்களை சரியாக பராமரித்து வந்தாலே நமது மாநிலமும் பொருளாதார ரீதியாக உயரும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஹிந்துக்களை பற்றியும் ஹிந்து கோவில்கள் பற்றியும் தரக்குறைவாக தான் பேசிவருவதுதான் தமிழக்த்திற்கு சாபக்கேடு