திமுக ஆட்சியில் சிறப்பாக நடைபெறுவது மணல் கொள்ளை மட்டும்தான் – அண்ணாமலை  !

திமுக ஆட்சியில் சிறப்பாக நடைபெறுவது மணல் கொள்ளை மட்டும்தான் – அண்ணாமலை !

Share it if you like it

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 35 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் அரசுப் பணிக்கான தேர்வு எழுதி, காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்று வாக்குறுதி கொடுத்த திமுக, 31 மாதங்கள் முடிவில் வெறும் 10000 பேருக்கு மட்டுமே அரசுப் பணி கொடுத்திருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

இந்துசமய அறநிலையத்துறை செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றங்களே விமர்சனம் செய்துள்ளன. நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ‘இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை எனவும், அறநிலைய அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் வழங்கினாலும் பணி செய்வதில் மெத்தனமாக உள்ளதாக நீதியரசர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், ‘தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்துப் பாருங்கள் தமிழ்நாடு கோவில்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மாதத்தில் பார்க்க முடியும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம், ‘கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கடுமையாக விமர்சித்தது மாண்புமிகு நீதிமன்றம். கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குவதில் என்ன பயன் என்று நேரடியாகவே அரசிடம் கேள்வி கேட்டது நீதிமன்றம். இந்து சமய அறநிலையத்துறை அறம் இல்லாத துறை. அரசு நியமித்த கொள்ளையர்கள்.

திமுக ஆட்சியில் சிறப்பாக நடைபெறுவது மணல் கொள்ளை மட்டும்தான் என்பது ஊரறிந்த உண்மை. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பங்காளிக் கட்சி, சமீபத்தில் அணைக்கட்டில் மணல் கொள்ளை சம்மந்தமாக போராட்டம் நடத்தினார்கள். உடனே, திமுக, அவர்கள் மீது அணைக்கட்டு ஒன்றியம் கரடிகுடி ஊராட்சியில் கடந்த ஆட்சியில், சட்ட விரோதமாக கல் குவாரியில் கிராவல் மண், மண் கடத்தல் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோயில் இடத்திலும் பல கோடி ரூபாய்க்கு கிராவல் மண் கற்களை திருடி விற்பனை செய்ததால் 200 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என எதிர் குற்றசாட்டு வைத்தது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது. இவர்கள் அவர்களை குற்றம் சொல்வார்கள். அவர்கள் இவர்களை குற்றம் சொல்வார்கள். இயற்கை வளங்களை சுரண்டி சுரண்டி கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் பாதி பகுதிகளை வறண்ட பூமியாக மாற்றியதே பங்காளிகளின் சாதனை. இவர்கள் இருவரும் பங்காளிக் கட்சி. நான் பகையாளியாம். மக்களுக்காக குரல் கொடுப்பதால் என்னை பகையாளி என்று அழைக்கிறார்கள். அதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 35 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் அரசுப் பணிக்கான தேர்வு எழுதி, காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்று வாக்குறுதி கொடுத்த திமுக, 31 மாதங்கள் முடிவில் வெறும் 10000 பேருக்கு மட்டுமே அரசுப் பணி கொடுத்திருக்கிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, தங்கள் தலைமுறையில் இதுவரை யாரும் அரசுப் பணியில் சேர வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உலகத் தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் உருவாக்கப்படும் அந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தாய்மொழி உட்பட ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழி செய்யப்படும். தமிழகத்தில் வளர்ச்சியைக் கொண்டு வரவேண்டியது பாஜகவின் கடமை. தமிழக அரசியலில் அழுக்குகளை அகற்ற, தமிழகம் முழுவதும் தாமரை மலர வேண்டும்.


Share it if you like it