வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தங்கள் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தங்களுக்கான சின்னமாகச் சைக்கிள் சின்னத்தை பயன்படுத்தி வந்தது. கடந்த தேர்தலின் போது, சைக்கிள் சின்னத்தில், அக்கட்சியின் வேட்பாளர்கள் பலர் போட்டியிட்டனர். இதனால், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தங்கள் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி மனு அளித்தும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என்றும், கடந்த 2019 -ம் ஆண்டு தேர்தலைப் போல் தற்போதும், சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், தனது மனுவில் த.மா.கா தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, த.மாகா மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.