இந்தியாவில் ஏழைகள் பணக்காரர்கள் என்று வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே தரமான மருத்துவ வசதி தருவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல் பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் குறைந்த செலவில் தரமான மருந்துகள் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் காணொலி வருகையில் பங்கேற்ற மாண்டவியா பேசியதாவது:-
இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் பிரதமர் மோடியின் நோக்கத்தில் சிறப்பான சுகாதார வசதி அளிப்பதும், நோய் நொடியற்ற சமுதாயம் உருவாக்குவதும் முக்கியமானது. நாட்டில் உள்ள அனைவருக்கும் காலதாமதம் இன்றி மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் .ஏழை பணக்காரர்கள் வேறுபாடு இன்றி அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி அளிப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது .இதனை அடைவதற்காக மத்திய அரசு சுகாதாரம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரையில் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு இணையாக அவற்றை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வி நிலையம், பிராந்திய துணை மருத்துவம், செவிலியர் அறிவியல் கல்வி நிலையம், இந்திரா காந்தி மருத்துவ சுகாதார கல்வி நிலையம் எய்ம்ஸ் உள்ளிட்டவற்றுடன் 23 புதிய மருத்துவக் கல்லூரிகள் வடகிழக்கில் தொடங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு, மக்கள் மருந்தகம் முன்னிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு இலவசமாக டியாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய அரசு அளிக்கும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மக்கள் மருத்துவத்துக்காக செலவிடுவது குறைந்துள்ளது. இதனால் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது என்றார்.