சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் தாகூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்தும் தாகூர் சேவாபாரதி நடமாடும் இலவச மருத்துவ ஊர்தியினை நேற்று 28/02/2024, தாகூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டது.
இந்த இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பின்தங்கிய குடிசை பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு இலவே மருத்துவ முகாமாக செயல்படும்
இது தினசரி மக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாக சென்று மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சைகள் மற்றும் இலவச மருந்துகள் கொடுக்கும் திட்டமானது நேற்று துவங்கப்பட்டது. ஏற்கனவே சேவாபாரதி மூன்று மருத்துவ ஊர்திகளை சென்னை மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் இயக்கி வரும் நிலையில் , நேற்று தாகூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து நான்காம் உறுதியை துவக்கி உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் பாரத மக்கள்தொடர்பு ஒருங்கினைப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள், சிருங்கேரி சாரதா, ஈக்விடாஸ் மருத்துவமனை னடரக்டர் DR. வைத்தீஸ்வரன் அவர்கள் தாகூர் கல்வி குழுமத்தின் தலைவர் திருமதி டாக்டர் M. மாலா அவர்கள், தாகூர் கல்வி
குழுமத்தின் செயலாளர் திரு.மணிகண்டன் (V.H.P,All India Trustee) அவர்கள்,செல்லா K.சீனிவாசன் மாநில பொருளாளர் சேவாபாரதி தமிழ்நாடு அவர்கள், திரு.நிர்மல் குமார் மாநில பொது செயலாளர்,சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் இந்நிகழ்ச்சியில் தாகூர் கல்வி குழும உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் வேங்கடமங்கள முன்னாள் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.