கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வருவாய் வளர்ச்சி விழுக்காடு தமிழகத்தில் 10% க்கும் குறைவாக உள்ளதாக புள்ளி விவரங்களுடன் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி திமுக அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
மாநிலங்கள் வாரியாக பிப்ரவரி மாதம் ஜி எஸ் டி வருவாய் பின் வருமாறு.
மகாராஷ்டிரா – 27,065 கோடி. (22,349)
கர்நாடகா – 12,815 கோடி.(10,809)
குஜராத் – 11,029 கோடி. (9574)
தமிழ்நாடு – 9,713 கோடி. (8774)
ஹரியானா – 8,269 கோடி. (7310)
உத்தர பிரதேசம்-8,054 கோடி. (7431)
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வருவாய் வளர்ச்சி விழுக்காடு தமிழகத்தில் 10% க்கும் குறைவு என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன. நாம் வரிசையில் அதே இடத்தில் இருக்கிறோம் என்று ஆறுதல் அடைவது சரியல்ல. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இந்த வருடம் நம்மை விட இரு மடங்கு விழுக்காடு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது, அம்மாநிலங்களின் அதீத வளர்ச்சியை காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் தமிழகத்தை முந்தி செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால், வீண் பெருமை பேசி, கட்டமைப்புகளை பெருக்காமல், முதலீடுகளை ஈர்க்க தெரியாமல், லஞ்சம், ஊழலில் ஊறித் திளைத்தால் மேலும் பின்னடைவையே சந்திக்க நேரிடும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்க கடமைப்பட்டுள்ளேன்.