5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, ஆண்டுதோறும் வழக்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம், நாடு முழுவதும் இன்று (மார்ச் 3) நடைபெற்றது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதால் இளம்பிள்ளை வாத நோய் தடுக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பந்திப்பூரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் கடுமையான பனிப்பொழிவு இருந்த போதும், அர்ப்பணிப்புள்ள சுகாதார ஊழியர்களின் குழு குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்கள்.
இது குறித்து வெளியான வீடியோவில், போலியோ சொட்டு மருந்தை எடுத்து கொண்டு, ஆள் உயர பனியில் சுகாதார ஊழியர்கள் நடந்து செல்வதை காணமுடிகிறது. மேலும் கையில் தடியை வைத்து கொண்டு பனியில் நடந்து செல்வதை காணமுடிகிறது. இவ்வாறாக பல இன்னல்களை கடந்து சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.