நேற்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அந்த பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அண்ணாமலை தனது பாஜக நிர்வாகிகளுடன் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் டீ குடிக்க சென்றுள்ளனர். கடைக்காரரிடம் டீ பொதுக்கூட்டத்தில் விற்று தீர்ந்ததால் அண்ணாமலைக்கு மட்டும் டீ போட்டு கொடுத்தார். அதன்பிறகு கூகுள் பே,போன் பே ஸ்கேன் செய்யும் கியூஆர் கோடை பார்த்து வியப்படைந்தார் அண்ணாமலை. அதன்பிறகு கடைக்காரரிடம் அவருடைய பிறந்த வருடத்தை கேட்டுவிட்டு அதே தொகையை போன் பே மூலம் பணம் அனுப்பினார். டீ குடித்துவிட்டு அந்த கப்பை போடுவதற்கும் தனியாக குப்பை தொட்டி வைத்திருந்தார். இதனை கண்ட அண்ணாமலை டிஜிட்டல் இந்தியாவும் வைத்துள்ளார், ஸ்வச் பாரத்’தும் வைத்துள்ளார் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுவே திராவிட கட்சிகளின் உபிக்கள் என்றால் டீ குடித்துவிட்டு பணத்தை தராமல் கடைக்காரரிடமே சண்டைபோட்டு பணத்தை பிடுங்கி ஏமாற்றி இருப்பார்கள். ஆனால் அண்ணாமலை அப்படி அல்ல. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை ஒரு உதாரணம். எப்படி இருக்கவே கூடாது என்பதற்கு திராவிட கட்சிகள் உதாரணம். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://x.com/annamalai_k/status/1764889932932509753?s=20