கொரோனாவில் இருந்து உலகை காக்குமா இஸ்ரேல்!

கொரோனாவில் இருந்து உலகை காக்குமா இஸ்ரேல்!

Share it if you like it

சீனா பரப்பிய கொரோனா தொற்றில், லட்சத்தையும் கடந்து அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். வல்லரசு நாடுகள் தங்கள் மக்களின் நிலையை உணர்ந்து ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. இந்நிலையில் ஹைஃபா என்னும் நிறுவனம், இஸ்ரேலில்  கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த, ஆறு கொரோனா தொற்று நோயாளிகளுக்கு.

ப்ளூரிஸ்டெம் என்னும் செல்-சிகிச்சை முறையை மேற்கொண்டது. அதில் அவர்கள் உயிர் பிழைத்திருப்பது மட்டுமில்லாமல். நான்கு பேர் எளிதில் சுவாசிக்கும் அளவுக்கு முன்னேறி இருப்பது மருத்துவர்களிடையே, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளூரிஸ்டெம் தலைமை நிர்வாக அதிகாரி யாக்கி யானே: ப்ளூரிஸ்டெமின் பி.எல்.எக்ஸ் செல்கள், அலோஜெனிக் மெசன்கிமல் போன்ற செல்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயற்கையான ஒழுங்குமுறை மாற்றி அமைக்கும். மேலும் நிமோனியா மற்றும் நிமோனிடிஸ் (நுரையீரல் திசுக்களின் பொதுவான அழற்சி) ஆகியவற்றின் ஆபத்தான அறிகுறிகளைக் குறைக்கும்.

பி.எல்.எக்ஸ் செல்கள் தொடர்பான முந்தைய கண்டுபிடிப்புகள் மூலம் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், நுரையீரல் ஃபைப்ரோஸிஸ், கடுமையான சிறுநீரக காயம் மற்றும் இரைப்பை குடல் காயம் ஆகியவற்றிற்கு விலங்களை ஆய்வு செய்ததில் இருந்து நாங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைத்தது

நோயாளிகள் மற்றும் சுகாதார அமைப்புகளின் நலனுக்காக பி.எல்.எக்ஸ் செல்களைப் பெரிய அளவில்  உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளோம்.

அதன் மூலம் ஏராளமான  நோயாளிகளுக்கு பி.எல்.எக்ஸ் செல்களை வழங்க முடியும். என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நோய் கிருமிக்கு எதிராக  உலகத்தரம் வாய்ந்த சில ஆய்வுகளை மேற்கொள்ள ப்ளூரிஸ்டெம் திட்டமிட்டுள்ளதாக யானே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாக்கி யானே.

தமிழக அரசு நேரம் தாழ்த்தாமல், இஸ்ரேல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து. அவர்கள் கண்டுபிடித்த மருந்தின் தன்மை பற்றியும். தமிழகத்திற்கு அம்மருந்தினை  பெறுவதற்கான ஆயத்த பணிகளில், உடனே இறங்க வேண்டும் என்று, பலரின் கோரிக்கையாக தமிழக அரசிற்கு முன் வைக்கப்பட்டுள்ளது.


Share it if you like it