மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, திமுக கூட்டணியில் இணைந்துள்ள மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கு பதில் மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொது செயலாளராக இருக்கும் அனுஷா ரவி மக்களவை தேர்தலில் போட்டியிடாததில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி மக்கள் நீதி மய்யத்தின் கட்சியிலிருந்தும் தான் வகித்த பதவியிலிருந்தும் விலகுவதாக அனுஷா ரவி குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவர் பாஜகவில் தற்பொழுது இணைந்திருக்கிறார். பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை முன்னிலையில் அவர் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். இந்த செய்தி கமல்ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக மாறியுள்ளது.