Share it if you like it
- கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்க காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாண்டிபோரா மாவட்டத்தைச் சேர்ந்த 150 சிறுமிகள் ஒரு லட்சம் முகக்கவசங்களை தயாரித்துள்ளனர்.
- பெண்களுக்காக மத்திய அரசு நிதியுதவி அளித்த தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் (என்.ஆர்.எல்.எஸ்) கீழ் இந்த முகக்கவசங்களை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அவை ஒவ்வொன்றும் ரூ .7 க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இதுபோன்ற மூன்று லட்சம் முகக்கவசங்களை தைக்க இலக்கு உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
- கொரோனா நோய் தொற்றை காரணமாக வைத்துக்கொண்டு தற்போது அத்தியாவசிய பொருட்களான மாஸ்க், சானிடைசர் ஆகியவைகளை MRP விலையை விட கூடுதல் விலையில் விற்று லாபம் பார்க்க நினைக்கின்றனர். இந்நிலையில் முகக்கவசங்களை தயாரித்து அதையும் குறைவான விலையில் விற்பனை செய்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் அந்த சிறுமிகளை பாராட்டி வருகின்றனர்.
Share it if you like it