தமிழகம் முழுவதும் தினம்தோறும் வாகன தணிக்கையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணம் தேர்தல் செலவுகளுக்கு வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ கொண்டு வரும் பணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், கைப்பற்றப்படும் ரொக்கம் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்களிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.50 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம் மையங்களுக்குப் பணம் நிரப்ப எடுத்து சென்ற வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணம் அரசு கருவூலத்தில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.