தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பெரம்பலூர் தொகுதியில் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை நிறுத்தியுள்ளது. இருப்பினும், அருண் நேருவின் பிரச்சாரத்தின் போது நடந்த சமீபத்திய நிகழ்வுகள், திமுகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வி களத்தூரில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியின் போது அருண் நேருவுடன் பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனும் உடன் இருந்தார். இருப்பினும், அன்பான வரவேற்பைப் பெறுவதற்குப் பதிலாக, அவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் இருந்து சரமாரியான கேள்விகளை எதிர்கொண்டனர். எம்.எல்.ஏ. சீட்களை வென்ற பின், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து ஓட்டு கேட்டு ஜெயித்துவிட்டு பின் மக்களை திரும்பி கூட பார்க்காததால், அப்பகுதி மக்கள் மிகுந்த விரக்தியுடன் இருந்தனர். எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்று எங்களுக்கு நன்றி சொல்லக் கூட வரவில்லை. இப்போது ஓட்டு கேட்க மட்டும் ஏன் வந்தீர்கள் ? இதுவரையில் தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் ? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
எம்.பி., வேட்பாளர் அருண் நேரு, எதிர்ப்பாராத இந்த வரவேற்பைப் பார்த்து விரக்தியடைந்து, திடீரென தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, அப்பகுதியை விட்டு வெளியேறினார்.
இதற்கிடையில், பா.ஜ.க வேட்பாளர் பாரிவேந்தன், தொகுதியில் உள்ள மக்களுக்கு உறுதியான பலன்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, அப்பகுதியில் வாக்கு சேகரித்தார். பாரிவேந்தன் 1500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் பெரம்பலூருக்கான ரயில்வே திட்டத்தை துவக்கி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.
மக்களின் பிரச்சனைகளை சரி செய்யாமல் தேர்தல் வந்தால் மட்டும் பல்லை இழித்துக்கொண்டு ஓட்டு கேட்டு வரும் திமுகவினர் மீது மக்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர். இந்த நிகழ்வானது ஆளும் திமுக மீதான அதிருப்தியை பொதுமக்கள் வெளிப்படையாக வெளிப்படுத்தும் முறையை வெளிப்படுத்துகிறது. கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் திமுகவிற்கு இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.