ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி என்பவர் கலெக்டர் (மாவட்ட ஆட்சியர்) தான். மாவட்டத்தில் எந்த பிரச்சனை நடந்தாலும் கூட முதல் கேள்வி என்பது கலெக்டருக்கு தான் செல்லும். இதனால் 24 மணிநேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டிய பொறுப்பு கலெக்டருக்கு உள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியராக திருமதி.பிருந்தா தேவி அவர்கள் இருக்கிறார். அவர் நேற்று இரவு தனது அலுவலக பணிகளை முடித்துவிட்டு தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாதி வழியில் டீசல் இல்லாமல் கார் நின்று போனது.
இதனால் கலெக்டர் பிருந்தா தேவி கடுப்பானார். காரை எடுக்கும் முன்பு டீசல் இருக்கிறதா? இல்லையா? என்பதை ‛செக்’ செய்ய மாட்டீர்களா? என கார் ஓட்டுனரையும் உதவியாளரையும் லெப்ட் ரைட் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் டென்ஷனான அவர் காரை விட்டு இறங்கி சாலையில் நடந்து சென்றார். இதனால் உதவியாளர் மற்றும் டிரைவர் ஷாக்காகி போயினர். இருவரும் கலெக்டர் பிருந்தா தேவியை சமாதானம் செய்து மீண்டும் காருக்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு டீசல் நிரப்பி காரில் புறப்பட்டு சென்றனர்.
இதுதொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும்போது சொந்த பிரச்சனைக்கு இடம் தர கூடாது என்பதற்காகத்தான் மாவட்ட ஆட்சியருக்கு தனி வீடு, அரசு வாகனம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தரப்படுகின்றன.
இப்படி இருக்க மாவட்ட ஆட்சியர் செல்லும் காரிலே டீசல் இல்லை என்றால் இதற்கு என்ன அர்த்தம் ? அரசு வாகனங்களுக்கு டீசல் போடக்கூட அரசு கருவூலத்தில் பணம் இல்லையா ? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.