அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மாணவர்கள் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி டெல்லி பல்கலைக்கழக சட்ட வளாக சட்ட மையத்தில் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
நிர்வாகம் விதித்துள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் மேற்கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண தெளிவான காலக்கெடுவை விதித்து போராட்டம் நடத்தினர். நிர்வாகத்திடம் ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டண உயர்வு மாணவர்களின் கவலையை அதிகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் சேர்த்து ஆண்டுக் கட்டணமாக ₹4900 செலுத்தி வந்தனர். இருப்பினும், புதிய கட்டணக் கட்டமைப்பின்படி, மாணவர்கள் ஆண்டுக்கு ₹6010 செலுத்த வேண்டும், மேலும் ஒரு மாணவருக்கு கூடுதலாக ₹1100 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களை வறுபுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏபிவிபி டெல்லி மாநில இணைச் செயலாளர் ஆஷிஷ் சிங், கட்டண உயர்வால் பல்வேறு பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையை எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு சவால்கள் மற்றும் துப்புரவுப் பிரச்சினைகளுடன், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் மாணவர்களின் சிரமங்களை அதிகரிக்கின்றன. நிர்வாகத்திடம் ஏற்கனவே முறையிட்ட போதிலும், நடவடிக்கை எடுக்கப்படாததால் ஏபிவிபி உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என உறுதி அளித்தனர்.