ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய நரசிங்கபாளையம் பூத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்கள் பாஜக உறுப்பினர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக சிதம்பரம் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சிதம்பரம் பாராளுமன்றத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய நரசிங்கபாளையம் பூத்துக்கு உள் முகவர்கள் அல்லாத பல இருந்தனர். அவர்கள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்கள்.
காவல்துறையிடம் தகவல் கொடுத்து அவர்களை அப்புறப்படுத்த சொன்ன பாஜக IT பிரிவைசேர்ந்த அருண் என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மக்களை வாக்களிக்க விடாமல் வாக்களிப்பவர்கள் எல்லாம் அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அராஜக போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.
பொது அமைதியை சீர்குலைத்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்களை தேர்தல் ஆணையமும் காவல்துறையினரும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாஜக மாநில துணை தலைவர் நாராயண திருப்பதி,அராஜக வெறியாட்டம். இந்த கும்பலை, வி சி க குண்டர்களை காவல் துறை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.