குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க, ஏப்ரல் 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளார். குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
ஏப். 29ம் தேதி புறப்படும் அவர் மே 7ம் தேதி வரை அங்கு தங்க திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடம் பிடித்தது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக விமர்சித்ததை தொடர்ந்து இந்தியர்கள், மாலத்தீவை புறக்கணித்தனர். இதனை அடுத்து ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்வது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களே பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக மாலத்தீவை புறக்கணித்தனர். அப்படி இருக்க மாலத்தீவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது நமது நாட்டை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது.
நமது நாட்டில் உள்ள லட்சத்தீவை பிரபலப்படுத்திய பிரதமர் மோடி எங்கே ? அண்டை நாடான மாலத்தீவை பிரபல படுத்தும் ஸ்டாலின் எங்கே ? நமது நாட்டை உயர்த்த யார் பாடு படுகிறார்கள் என்று இந்த ஒரு நிகழ்வில் புரிந்துவிடும்.