கோவிலில் ஒலிபெருக்கி அமைத்து திருவிழா கொண்டாடிய சமயத்தில் ஒலிபெருக்கி இடையூறாக இருப்பதாக கூறி அப்புறப்படுத்தி உள்ளத்திற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் அப்பகுதி மக்கள் ஒலிபெருக்கி அமைத்து கோலாகலமாக திருவிழா கொண்டாடியுள்ளனர்.
கோவிலில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்ததால் ஒலிபெருக்கி இடையூறாக இருப்பதாக கூறி அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது
2014 ஆம் ஆண்டு சித்தர் காடு திருக்கோவிலில் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகம் அமைக்கும் பொழுதே அப்பகுதி மக்கள் அலுவலகம் இங்கு அமைக்க கூடாது அலுவலகம் இருந்தால் எங்கள் வழிபாட்டிற்கு இடையூறாக இருக்கும் என்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்…
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆலயங்களில் இடையூறுகள் ஏதுமின்றி திருவிழாக்களும் ஆலய தரிசனமும் வெகு விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது
ஆனால் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பக்தர்களை வெறுப்படைய செய்யும் வகையிலும் இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது ஆகும்.
நாத்திக திமுக அரசு ஆலய உண்டியல் பணத்தை கொள்ளையடிப்பதிலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நகைகளை களவாடுவதிலும் குறிக்கோளாக செயல்பட்டு வருகிறதோ என மக்கள் அஞ்சிடும் சூழலே நிலவுகிறது.
இந்து அறநிலையத்துறை என்பது ஆலயத்தின் உடைய காவலாளி என்பதை மறந்துவிட்டு உரிமையாளராக நினைத்து செயல்படும் மனநிலையை உடனடியாக கைவிட வேண்டும்
பக்தர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி ஆலய வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் இந்து அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு உடனே வெளியேறு.
பகுத்தறிவு பேசும் நாத்திகம் பேசும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நலம் பெற வேண்டியும் சாகும் வரை முதல்வர் நாற்காலியில் நீடிக்க வேண்டும் என்றும் துர்கா ஸ்டாலின் அம்மையார் கோவில் கோவிலாக சென்று வழிபாடு செய்வதற்கு இந்து அறநிலையத்துறை அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதை போல பக்தர்களுக்கும் செய்து கொடுத்தால் பக்தர்களின் குடும்பமும் சிறப்பாக இருக்குமே.! இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவு போடுமா துர்கா ஸ்டாலின் குடும்பம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.