தேர்தல் வருவதற்கு முன்பு காங்கிரஸ் திமுக போன்ற கட்சினர் சனாதன தர்மத்தை விமர்சிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டு நாடகம் ஆடுகின்றனர், தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் சனாதன தர்மத்தை இழிவுபடுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இதையேதான் வாடிக்கையாக வைத்துள்ளனர் காங்கிரஸ் திமுக. இந்நிலையில் பிரச்சார மேடை ஒன்றில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மாபெரும் ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை தோற்றுவித்த சத்ரபதி சிவாஜி சிலையை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை அந்த சிலையை கையில் கூட வாங்காமல் நிற்கிறார். பிறகு அந்த சிலையில் கொண்டு வந்தவர் அங்கிருந்த மேஜையில் வைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் அந்த சிலையை அப்புறப்படுத்த சொல்கிறார். இந்த காணொளியானது தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சத்ரபதி சிவாஜி பற்றி சில :
சில நூற்றாண்டுகள் நாடு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைப்பட்டிருந்த போது அதை உடைத்தெறிந்து மாபெரும் ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை கட்டியவர் சத்ரபதி சிவாஜி. தேசபக்த நெஞ்சங்களில் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை.
சிவாஜியின் தாய் ஜீஜாபாய், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த வீரனாக, பகைவர்களை வெல்பவனாக, அரசாட்சி செய்பவனாக, ஹிந்து ராஜ்யம் அமைப்பவனாக விளங்க வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். எனவே சிவாஜி பிறந்ததும் “தாயே, ஹிந்து தேசத்தை பெரியதாக்கி அதையும் சீக்கிரமாக எங்கள் கண்முன் காட்டுவாயாக” என வேண்டிக்கொண்டார். சிவாஜிக்கு, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து ராமர், கிருஷ்ணர் மற்றும் பலரின் வீரதீர பராக்கிரமங்களை கதைகளாகச் சொல்லிவந்தார். அதுவே அவரை மாவீரர் ஆக்கியது.
சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, தனக்கு ஆலோசனை வழங்க 8 அமைச்சர்கள் கொண்ட ‘அஷ்டபிரதான்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார் சிவாஜி.
ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் ஒரு தனிப்பட்ட தன்மை இருக்கும். சக்கரவர்த்தி சிவாஜியின் சிறப்புத்தன்மை, புதிது புதிதாக கோட்டைகள் கட்டி, எதிரிகளை நடுங்க வைப்பது! வருகட், பூஷண்கட், மஹிமாகட், வர்தன்கட், சதாசிவகட், மச்சேந்திரகட் என எத்தனை கோட்டைகள்! அது மட்டுமல்ல, எதிரிகள் வசமிருக்கும் கோட்டைகளைக் கைப்பற்றுவதும் அவருக்கு கைவந்த கலை. சிவாஜி எப்போதும் தன்முன் வரைபடத்தை விரித்து வைத்துக்கொண்டு, எந்தெந்தக் கோட்டைகளைப் பிடிக்கலாம் என ஆலோசனை செய்வார். அவருடைய திட்டமிடலால், அவருடைய ராஜ்யம் விரிவாகிக் கொண்டேபோனது. அவரது பேரரசு, தற்போதைய மகாராஷ்டிரம், கர்நாடகம் பகுதிகளில் பரவி, தமிழகத்தின் தஞ்சை வரை நீண்டிருந்தது.